சூப்பர் அறிவிப்பு…இந்த ஊரில் தோட்டக்கலைப் பூங்கா;ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

கடலூர்:வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 14.8.2021 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பிறவற்றுடன் பின்வரும் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் … Read more

இன்று முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி…!

கர்நாடகாவில் இன்று முதல் மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், … Read more

தனியார் விளம்பர பலகையை கிழித்தெறிந்த எம்.எல்.ஏவிற்கு குவியும் பாராட்டுகள்..!

சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் விளம்பர பலகையை கிழித்தெறிந்த எம்.எல்.ஏவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  சென்னை துரைப்பாக்கம் கார்ப்பரேஷன் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து இதனை பராமரித்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பூங்காவின் வெளியே காவலாளி ஒருவரை நியமித்து பூங்காவிற்கு மக்கள் நுழைவதை தடுத்து வந்துள்ளது. இந்த சம்பவம் … Read more

900 ஏக்கரில் ரூ.396 கோடியில் சேலத்தில் பூங்கா

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று  சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.இதனால் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.மூன்று பிரிவுகளாக அமையவுள்ளது.மேலும் இந்த பூங்காவில், கால்நடை மருத்துவமனை,  உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தும் கூடம் உள்ளிட்டவை  அமைக்கப்படவுள்ளது இந்த நிலையில் இன்று  முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள பூங்கா தொடர்பாக  ஆலோசனை நடத்தினார். … Read more

சிங்கத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்..!

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் வழக்கம் போல நேற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள விலங்குகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். சிங்கம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு சுவர் மற்றும் இரும்பு வேலிகள் அமைந்துள்ளது. இந்நிலையில்  இதை அனைத்தையும் தாண்டி ஒரு இளைஞர் சிங்கம் இருக்கும் பகுதியில் உள்ளே நுழைந்தார்.அந்த இளைஞர் சிங்கம் அருகில் செல்வதை பார்த்த பொதுமக்கள் எல்லாம் அலறினர். இது எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படாத அந்த இளைஞர் சிங்கத்தின் அருகே அமர்ந்து முகத்தை நேருக்கு … Read more

“திருச்சி முக்கோம்பு”பூங்கா அணை உடைந்து 30 நாட்களுக்கு பின் அனுமதி….!!

திருச்சி முக்கோம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 30 நாட்களுக்கு முன் திருச்சி முக்கோம்பு கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது . இந்நிலையில் 30 நாட்களுக்கு பின் திருச்சி முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கி ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். இன்று முதல் முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு … Read more

தானாக ஆடும் ஊஞ்சல் இணையத்தில் வைரலாகும் வீடியோ பேய் இருக்கா இல்லையா பாத்துட்டு சொல்லுங்க

தைரியசாலி நான் சொல்பவர்கள் பேய்க்கு பயப்புடாதோர் எவரும் இல்லை என்பர்.ஒரு பூங்காவில் ஊஞ்சல் தானாக ஆடுவது போல் ஒரு வீடியோ இணையதளத்தில்  வைரலாக பரவி வருகிறது .இதில் சிறுவர்கள் யாரோ வீடியோ எடுதுக்கொண்டிருக்கின்றனர் தொடர்ந்து ஆடுவதும் இடையில் நிற்பதுமாய் இந்த வீடியோ அமைந்துள்ளது . ஆனால் இந்த வீடியோக்கு நெட்டிசன்கள் இது வெறும் புரளி கயிற்றால் இழுப்பது போல் உள்ளது என தெரிவித்துள்ளனர் .