மக்களவை தேர்தல்..! சிவகங்கை தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டியிட விருப்ப மனு

OPS: மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட அவரின் ஆதரவாளர் மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. Read More – போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது..! ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி … Read more

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்: ஓபிஎஸ்

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ”அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம். இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தான் வெற்றி பெறுவார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியை நாசப்படுத்திவிட்டார். அம்மா மக்கள் … Read more

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் தீவிர ஆய்வு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியா முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்தகம், உணவகங்கள் (பார்சல் மட்டும்) இது தவிர மளிகை, காய்கறி சந்தைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதையும் … Read more

அதிமுகவில் இணைய விருப்பம்! ஜெ.தீபா அதிரடி முடிவு!

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெ.தீபா, அதிமுக கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரான  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுவில் சேர விருப்ப கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது! ஓபிஎஸ் பதில்!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார். மேலும் திமுக சார்பில் கூறுகையில் மத்திய அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாமென்றால், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசை வலியுறித்தியாவது தீர்மானம் போடுங்கள் என குறிப்பிடபட்டது. தமிழக … Read more

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு !விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு … Read more

28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறும்  என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை  வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை  ராயப்பேட்டையில்  தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் . முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி- பன்னீர்செல்வம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி என்று துணை முதலைமச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில்,அதிமுக தொண்டர்களின் கட்சி. அதிமுகவில் தொண்டர்களை முதல்வராக மாற்ற முடியும் .திமுகவில் ஒரு தொண்டர் … Read more

கடந்த ஆண்டு என்னை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது உண்மை …!எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு…!தினகரனிடம் புலம்பிய பன்னீர்செல்வம்

  திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா … Read more