கடந்த ஆண்டு என்னை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது உண்மை …!எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு…!தினகரனிடம் புலம்பிய பன்னீர்செல்வம்

 
திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
Image result for ops dinakaran

பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
Image result for ops dinakaran
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று நேரம் கேட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

அதிலும் குறிப்பாக 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார்.ஆனால் திரை மறைவில் எங்களிடம் பேசும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேடையில் எங்களை விமர்சிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Image result for ops dinakaran
இந்நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். “திகார் சிலையில் இருந்து விடுதலையான என்னை பன்னீர்செல்வம், 2017 ஜூலை மாதம் சந்தித்தார் என்பது உண்மை.கடந்த ஆண்டு நான் ஓ .பன்னீர் செல்வத்தை சந்தித்தது எனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்.எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது பன்னீர்செல்வம் கூறினார்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.
எனது நண்பர் பலர் மூலமாக பன்னீர்செல்வம் தூது அனுப்பினார்.தர்மயுத்தம் நடத்தியது தவறு என்றும் கூறினார் பன்னீர்செல்வம்.என்னை முதலமைச்சராக வேண்டும் என்று பலமுறை தூதுவிட்டார் பன்னீர்செல்வம்.எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார் .எடப்பாடி பழனிசாமி,பன்னீர்செல்வம் உட்பட 10 பேருடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment