பரபரப்பு…திடீரென மயங்கி விழுந்த சீமான் – என்ன ஆச்சு?..!

சென்னை:திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார். திருவொற்றியூர்,அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில்,பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.அவருடன் கட்சியினரும் சென்றிருந்தனர். பயம் வேண்டாம்: கடுமையான வெயில் வாட்டி விதைக்கும் நிலையில்,வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர்,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில்: “நம்பிக்கையோடு இருங்கள்,பயப்பட வேண்டாம்.எந்த கட்டிடம் இடித்தாலும் அங்கே நாம் … Read more

“மாநில இறையாண்மைக்கு சவால்;இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது” – சீமான் கண்டனம்!

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் … Read more

“இது திமுகவினர் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

சென்னை:நாம் தமிழர் கட்சி சார்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,குறுக்கிட்ட திமுகவினரின் செயல் குறித்து,கருத்து சுதந்திரத்தை பலி கொடுப்பது திமுகவினரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே … Read more

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பதிவு : நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது..!

பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில்  நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் விமர்சனம் செய்தததாக கைது செய்யப்பட்டார். குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி  நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு நாடு முழுக்க பலர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில்,  சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக … Read more

பெரும் அதிர்ச்சி…தமிழக அரசே இதற்கு உடனடியாக தீர்வு வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு,மாணவர் நலன் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில் 90 விழுக்காடு … Read more

கல்லூரி மாணவர் சந்தேக மரணம்:உடனடியாக உரிய நீதி விசாரணை வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்  என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 5 ஆம் தேதியன்று பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் … Read more

“இதையே சரிவர நிர்வகிக்காதவர்,முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?” – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகம்:திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆணவப்படுகொலைகள்,பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என நாளும் வெளிவரும் கொடுஞ்செய்திகளும், குற்ற நிகழ்வுகளும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக் கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சி – … Read more

“திமுக அரசு,இம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா?;வெட்கக்கேடு” – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகம்:இசுலாமியர்களது காவலரெனத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு,இம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது … Read more

“கொடும் வலியை தருகிறது;இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

கரூர்:12 ஆம் வகுப்புப் படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மனத்துயரும் கொண்டதாக சீமான் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த  நிலையில்,அந்த மாணவி நேற்று முன்தினம் மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு … Read more

தமிழக அரசே!வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை – சீமான் வலியுறுத்தல்

சென்னை:நாம் தமிழர் தம்பிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. இந்நிலையில்,கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால … Read more