#JustNow: மாநிலங்களவை தேர்தல் – 24 முதல் வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல். தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…?

இந்த வாரம் நாமினேஷனில் உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் அபினை, நிரூப், அக்ஷரா, இமான் மற்றும் சிபி ஆகிய 5 பேரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதாக … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்:வேட்புமனுவை தாக்கல் செய்த ஓபிஎஸ்,இபிஎஸ் !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வேட்புமனுவை,தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓபிஎஸ்,இபிஎஸ் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்,இந்த தேர்தல் மூலம் அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்:ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனுவை ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று தாக்கல் செய்கின்றனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் தெரியுமா…?

இந்த வாரம் நாமினேஷனில் ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் தான் போட்டியாளர்களால் அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வார எவிக்ஷினில் சுருதி வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் தற்பொழுது நடைபெறுகிறது. இதில் ராஜு மற்றும் பிரியங்கா தான் அதிக அளவில் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதோ … Read more

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக,பாஜக வேட்பாளர் பிரியங்கா நாளை வேட்புமனுத் தாக்கல்…!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் நாளை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார். மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து … Read more

#Breaking:புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு!

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.முதல்வராக கடந்த மே மாதம் 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார்.ஆனால்,அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இதற்கிடையில்,துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சகர்கள், சபாநாயகர் பதவிகளை பாஜக கேட்டு வந்தது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது. இதனையடுத்து,பாஜக மேலிட தலைவர்களோடு முதல்வர் … Read more

துறைமுகம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்மனு நிராகரிப்பு.!

துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் செலவு கணக்கை வேட்புமனுவில் குறிப்பிடாததால் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரித்ததாக தகவல் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வெந்ட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை முதல் 234 தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது, வேட்புமனுவில் … Read more

#ElectionNews: வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் … Read more

சைக்கிளில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை!

அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும் சைக்கிளில் அண்ணாமலையுடன் சேர்ந்து சென்றுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.