சீதா, அக்பர் பெயர் சர்ச்சை! சிங்கங்களின் பெயர்களை மாற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேற்கு வங்க மாநிலத்தின் உயிரியல் பூங்காவில் உள்ள அக்பர் மற்றும் சீதா பெயர்களை கொண்ட சிங்கங்களின் பெயர்களை மாற்றுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது. ஆனால், சீதா, அக்பர் என்ற … Read more

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையம் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் … Read more

கார் விபத்தில் மம்தா பானர்ஜி காயம்!

Mamata Banerjee

கொல்கத்தாவில் கார் விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக கொல்கத்தாவுக்கு திரும்பி  கொண்டிருந்தபோது திடீரென காரில் பிரேக் போட்டதில் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

Suchana Seth

பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி … Read more

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!

Shankar Adhya

மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த போதிலும், தனது கணவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி ஜோத்ஸ்னா ஆதியா … Read more

ரெய்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்..!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர்.  அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை … Read more

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Amit Shah

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இதன்பின், தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், எந்த மாநிலத்தில் அதிகமாக ஊடுருவல் நடக்கிறதோ, அங்கு … Read more

1000 EV சார்ஜிங் நிலையங்கள் 2024க்குள் அமைக்கப்படும்..! மேற்கு வங்க அரசு அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது  குறைவாக உள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க … Read more

மேற்கு வங்க ஆளுங்கட்சி பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு.! அடையாளம் தெரியாத 2 உடல்கள் மீட்பு.!

மேற்கு வாங்க ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.  மேற்கு வங்க மாநில ஆளுங்கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புர்பா மேதினிபூர் பகுதி பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நடந்ததாக  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவாரேல் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 26 அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.! மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு … Read more