#Breaking:பாதியிலேயே வெளியேறிய ஓபிஎஸ்;சலசலப்புடன் முடிந்த பொதுக்குழு!

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் … Read more

#Breaking:அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்;கழகத்தின் காவலரே,ஒற்றை தலைமையே என முழக்கமிட்ட தொண்டர்கள்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,சென்னை,அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதன்படி,பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்தா பரபரப்பான நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.தனது இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில்,தற்போது ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சென்றுள்ளார்.மேலும்,தனது ஆதரவு … Read more

“அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப் படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும்,அதன் முடிவு 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது . அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்:வேட்புமனுவை தாக்கல் செய்த ஓபிஎஸ்,இபிஎஸ் !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வேட்புமனுவை,தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓபிஎஸ்,இபிஎஸ் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்,இந்த தேர்தல் மூலம் அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த … Read more

#Breaking:அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனு;கட்டணம் இதுதான்?- ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுவதாக ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினர் நாளை முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற … Read more

“கோரிக்கைகளை கேட்க வருகிறோம்” – நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம்..!

சென்னை:மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழகத்தில் இல்ல பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். அதே வேளையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் … Read more

உள்ளாட்சி தேர்தல்;கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் – ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அதிமுக தலைமை ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதன்படி,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி … Read more