குஷியில் மாணவர்கள்…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்,இந்த கோயிலின் மாசி கொடை திருவிழா கடந்த மாதம் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக,பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் … Read more

மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!

தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போட்டி நிலவி, வெற்றி பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை … Read more

“கன்னியாகுமரியில் விமான நிலையம் ” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை…!

கன்னியாகுமரியில் விமான நிலையம்  அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இயக்கம் நவீன உலகின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான இந்தியாவில் விமான சேவையின் அளவை … Read more

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் சில தினத்துக்கு முன்பு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், இந்த வீடியோ … Read more

கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் மூழ்கிய கார்-தந்தை, மகள் பரிதாப உயிரிழப்பு..!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள்கள் ஷாமிலி மற்றும் ஷாலினி. மூவரும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ஆம்னி காரில் பயணித்துள்ளனர். அப்போது கருங்கல் என்ற பகுதியில் கோணம் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த குளத்திற்குள் சிக்கியது. அதை பார்த்த பொதுமக்கள், உடனே காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த காரில் இருந்த … Read more

பேச்சிப்பாறை அணைக்கு 9,000 கன அடி நீர்வரத்து ..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை திறந்து விட்டனர். இன்று அதிகாலையில் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 17,320 கன அடியாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு சற்று … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, குமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல்.  தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம்..!

யாஸ் புயல் எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியது. தற்போது அது முழுவதுமாக கரையை கடந்து முடித்துள்ளது. அந்த புயல் தற்போது பாலசோர் என்ற இடத்தில் மையம் கொண்டுள்ளது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை … Read more

கன்னியாகுமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை ..!

டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ்-தே புயல் உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று இரவில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் … Read more

ஒரே நாளில் 2 முறை வாக்களிக்கும் குமரி மாவட்ட மக்கள்..!

காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் … Read more