விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”வெல்லும் ஜனநாயகம்” மாநாடு திருச்சியில் தொடங்கியது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமை வகிக்கிறார். இதில் ஸ்டாலினுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகிய தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் … Read more

பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

thol thirumavalavan

தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். கடைசியாக கடந்த கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வீடு திரும்பினார். நேற்று மீண்டும் மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் … Read more

ஆளுநர் பதவி விலகுவதே சரி – திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய  இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #இராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உழன்ற ஆறு பேர் விடுதலை! ஆளுநரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக … Read more

அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!

1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.   தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக … Read more

தமிழகத்தில் அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும்.! திருமாவளவன் காரசார விமர்சனம்.!

தமிழகத்தில் பாஜவுக்கு பணியும் அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு. தவறு செய்தால் வால் ஓட்ட நறுக்கப்படும் என திருமாவளவன் அண்மையில் பேசியுள்ளார்.   தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர்,  அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர். இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.! திருமாவளவன் கடும் விமர்சனம்.!

பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார்.  வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் … Read more

“கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை; குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தி தப்பிவிடக் கூடாது” – விசிக தலைவர் வலியுறுத்தல்..!

கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,கண்ணகி -முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், மேல்முறையீட்டில் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: “கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி -முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த … Read more

“அண்ணா பிறந்த நாளில் விடுதலை;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன்..!

அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி … Read more

“நீட் தேர்வு விலக்கு மசோதா நாளை தாக்கல்;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். … Read more