ஆளுநர் பதவி விலகுவதே சரி – திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய  இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தொல்.திருமாவளவன் ,”இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் , தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஈடேறி உள்ளதாகவும் ” தெரிவித்துள்ளார். மேலும்,” ஆளுநரின் தமிழர் விரோத போக்கிற்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், ஆளுநர் தனது பணியை செய்யாமல் இருந்ததற்காக பதவி விலக வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 7 தமிழர் விடுதலையை வலியுறுத்திய தமிழக சட்டசபையின் தீர்மானம் குறித்து ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில்,சட்ட போராட்டம் மூலமாக அவர்கள் விடுதலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Aravinth Paraman

Leave a Comment