வருமான வரித்துறை சோதனை : நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!

மூன்று நாட்களாக சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்றவர். மேலும், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக … Read more

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு ….!

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் … Read more

இ-பதிவு தளம் 6 நாட்கள் இயங்காது- அரசு அறிவிப்பு…!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான ‘இ-பதிவு’ தளத்தை மாற்ற இருப்பதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள ‘இ-பதிவு’ தளம் இயங்காது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வோர் இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற ‘இ-பதிவு’ தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஜூன் 7 முதல் www.incometax.gov.in என்ற புதிய ‘இ-பதிவு’ தளம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும்,மேலும்,இந்த புதிய தளமானது நவீனமான மற்றும் எளிமையான … Read more

வருமான வரி கணக்குகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். ..!

வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை வெளியிட வேண்டும். அந்தவகையில் கடந்த வருடம் 2020 ல் வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். அதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பாய்டனின் வருமானத்தை விட துணை அதிபர் கமலா ஹாரிஷின் வருமானம் 10 … Read more

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு..!

வரி செலுத்துவோர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா காரணமாக அக்டோபர் 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோருக்கு, வருமான வரி வருமானம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு … Read more

15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உலக ஒப்பந்தங்களிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்று உள்ளார். இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…

கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியதாவது:தேர்தலின்போது நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றிருந்த செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. … Read more

மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு, குறு நிறுவனங்களும் சரிவர தங்கள் ஸ்தாபனத்தை இயக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு … Read more

பொறி வைத்து பிடித்த சிபிஐ.! கைதான வருமான வரித்துறை அதிகாரிகள்.!

ராஜஸ்தானில் வருமானவரித்துரை அதிகாரி லஷ்மண் சிங், வருமானவரி ஆய்வாளர் பிரேம் சுக் திதெல், இவர்கள் இருவரும் நாக்பூரில் பணியாற்றுபவர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சுரேஷ் பரீக் ஆகிய 3 போரையும் சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது புகார் அளித்த நபரிடம் இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணக்கில் உள்ள சிலபல விவகாரங்களை சரிக்கட்ட ரூ.5 லட்சம் கொடுத்தால் சரி செய்யலாம் என்றும் இதனை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் கொடுக்குமாறும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த தகவலை அடுத்து புகார் அளித்த … Read more

ரூ.170 கோடி வாங்கியதாக காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்..!

கடந்த மாதம் வருமானவரித்துறையினர் டெல்லி , மும்பை ,ஹைதராபாத்,ஈரோடு , புனே,ஆக்ரா ,கோவா உள்ளிட்ட  நகரங்களில் 42 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ரசீது கொடுத்தும் , ஹவாலா முறையிலும் ரூபாய் 3,300 கோடி பணம் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங்  நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் முறைகேடாக ரூ.170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திராவை சார்ந்த ஒரு பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் ரொக்கமாக … Read more