பொறி வைத்து பிடித்த சிபிஐ.! கைதான வருமான வரித்துறை அதிகாரிகள்.!

ராஜஸ்தானில் வருமானவரித்துரை அதிகாரி லஷ்மண் சிங், வருமானவரி ஆய்வாளர் பிரேம் சுக் திதெல், இவர்கள் இருவரும் நாக்பூரில் பணியாற்றுபவர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சுரேஷ் பரீக் ஆகிய 3 போரையும் சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது புகார் அளித்த நபரிடம் இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணக்கில் உள்ள சிலபல விவகாரங்களை சரிக்கட்ட ரூ.5 லட்சம் கொடுத்தால் சரி செய்யலாம் என்றும் இதனை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் கொடுக்குமாறும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளைக் கொடுத்து ஆடிட்டரிடம் கொடுக்குமாறு அனுப்பியுள்ளனர். அப்போது ரூ.4 லட்சத்தை ஆடிட்டர் பெறும்போது சிபிஐ-யிடம் ஆடிட்டர் சிக்கினார். பின்னர் ஆடிட்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் வருமான வரி அதிகாரிகளான சிங் மற்றும் திதெல் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த சோதனையில் மேலும் சில ஆதாரங்கள் சிக்கியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்