இ-பதிவு தளம் 6 நாட்கள் இயங்காது- அரசு அறிவிப்பு…!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான ‘இ-பதிவு’ தளத்தை மாற்ற இருப்பதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள ‘இ-பதிவு’ தளம் இயங்காது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வோர் இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற ‘இ-பதிவு’ தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ஜூன் 7 முதல் www.incometax.gov.in என்ற புதிய ‘இ-பதிவு’ தளம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றும்,மேலும்,இந்த புதிய தளமானது நவீனமான மற்றும் எளிமையான அனுபவத்தை வரி செலுத்துவோருக்கு வழங்கும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதனால்,தற்போது பயன்பாட்டில் உள்ள ‘இ-பதிவு’ தளம் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை இயங்காது.அந்த 6 நாட்களில் பழைய ‘இ-பதிவு’ தளத்தில் இருந்து புதிய ‘இ-பதிவு’ தளத்திற்கு கணக்கு மாற்றம் பணிகள் நடைபெறும் என்றும்,அதன்பின்னர்,ஜூன் 7 முதல் புதிய இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த ‘இ-பதிவு’ தளத்தை மாற்றம் செய்யும் பணிகள் காரணமாக, புகார்கள்,விசாரணைகளுக்கான தீர்வுகளின் தேதியை ஜூன் 10 ஆம் தேதிக்கு பிறகு நிர்ணயித்துக்கொள்ளுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.இதனால்,வருமான வரி தாக்குல் செய்வதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,வரி செலுத்துவோர் தங்களுக்கு அவசர பணிகள் ஏதும் இருந்தால் அதனை 2021 ஜூன் 1 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.