மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு, குறு நிறுவனங்களும் சரிவர தங்கள் ஸ்தாபனத்தை இயக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு காலவரையறையை நீட்டித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 – 19 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 30ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசமானது 2021 மார்ச் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கபட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.