#BREAKING: திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7-ம் தேதி..துரைமுருகன் அறிவிப்பு..!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ஆம் தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனை விமர்சித்த முதல்வர்.!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது கொரோனா தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார் என முதலமைச்சர் விமர்சித்தார்.  தொடர்ந்து பேசிய முதல்வர், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இதற்கு பதில் கூறிய திமுக பொருளாளர் துரைமுருகன்,நாளை முதல் முக கவசம் அணிந்து தான் சட்டப்பேரவைக்கு வருவோம் … Read more

பழனிசாமி அரசுக்கு சட்டமும் தெரியாது – துரைமுருகன்

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக அரசு சர்வாதிகார போக்கில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர். பின்பு  போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர். இந்த நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் … Read more

ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது -ரஜினிக்கு துரைமுருகன் பதில்

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இது குறித்து திமுக பொருளாளர் துரை முருகன் கூறுகையில், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்.தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது . தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது.ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று … Read more

Breaking News : துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆவார்.இவருக்கு இன்று  ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீமான் குறித்து பேசி என் தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை- துரைமுருகன்

சீமான் குறித்து பேசி என் தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில் சுகாதாரத் துறை என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் பத்திரிக்கைகளில் தினந்தோறும் உயிரிழப்பு குறித்த செய்திவருகிறது அமைச்சர் பத்திரிக்கை படிக்கிறாரா? … Read more

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில்  முதலமைச்சர் கூறுவது தவறு -துரைமுருகன்

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில்  முதலமைச்சர் கூறுவது தவறு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன்  கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் .காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு . காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல், இடைக்கால தீர்ப்பு கோரியதுவரை திமுகதான் என்று  … Read more

ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை-துரைமுருகன்

முதலமைச்சர் பழனிசாமிக்கு  மு.க.ஸ்டாலின் பற்றியோ மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  வெளிப்படையான நிர்வாகத் திறமை மற்றும் ஊழல் இல்லாமல் விரைந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி போன்ற நேர்மையான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டை வெகுவாகத் திரட்டியது தி.மு.க. ஆட்சி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சி பற்றியோ – தலைவர் கலைஞர் அவர்கள் பற்றியோ கழகத் தலைவர் … Read more

முதல்வரின் வெளிநாட்டு பயணம்! அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலும் திமுக பொருளாளர் துரைமுருகனின் பதிலடியும்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை லண்டன், நியூயார்க், கலிஃபோர்னியா, துபாய் என வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது தனது பணிகளை வேறு அமைச்சருக்கு கொடுத்துவிட்டு போகாமல், அனைத்து பணிகளையும் தானே கவனித்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், ‘தற்போது டெக்னலாலஜி  முன்னேறிவிட்டதால், எந்த ஒரு முக்கிய முடிவுகளானாலும், அதனை அவர் எடுத்துவிடுவார். ஆதலால் மாற்று … Read more

எவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை

ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று  இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு  நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள … Read more