தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ்  பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திடவும், சிறு, குறு … Read more

சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் – துரைமுருகன்

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மோடியின் அறிவுறுத்தலின்படி ஊடரங்கு பின்பற்றி வருகிறது. … Read more

ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் … Read more

அரசின் விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கப்படும் – கால்நடை துறை அமைச்சர்

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக … Read more

வரும் 1ம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ் அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். 

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில் பாலாஜி செல்வார் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்.!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க … Read more

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் – முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு.!

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் என்றும் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.  மேலும் 15 மாவட்டங்களில் … Read more

மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் – முதல்வர் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என்றும் சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என சட்டப்பேரவையில்  தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும்போது செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில் 3 … Read more

தான் வளர்க்கும் கோழிகள் 28 குஞ்சுகள் பொரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது கால்நடைத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், இலவச கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். அதில் 15 பெட்டை கோழிகளும், 10 … Read more

இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பேசிய மன்னார்குடி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி ஒன்றியம், வடபாதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர்  அனுமதி பெற்று அதிக அளவு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படுவதுடன், 1200 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற … Read more