#BREAKING: பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் – ஈபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என ஈபிஎஸ் தரப்பு உத்தரவாதம் என சிவி சண்முகம் பேட்டி. ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. அதிமுக பொதுக்குழு கூட்டம் … Read more

#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் “ஆதரவுக் கடிதம்”.. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, … Read more

அதிமுக அலுவலகம் வழக்கு – சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்!

அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல். அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதிமுக … Read more

முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் – சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கோரி மனு

அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை … Read more

ஓபிஎஸ் மீது புகார்.. பீரோவை உடைத்து, அசல் பத்திரம் கொள்ளை – சி.வி.சண்முகம்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளை, அண்ணா … Read more

#BREAKING: சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! – டிஜிபியிடம் புகார்!

சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார். அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி … Read more

#Breaking:”தேர்தல் ஆணையத்தை இன்னும் நாடவில்லை?” – ஓபிஎஸ் தரப்பு திடீர் தகவல்!

அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் … Read more

“அம்மா சொன்னால் சட்டம்;திமுகவே மகிழ்ச்சி வேண்டாம் – முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த விளக்கம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும்,மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையத்தில் மனு: குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இதனிடையே,டெல்லி சென்றுள்ள … Read more

#BREAKING: இரட்டை தலைமை பதவி காலாவதியானது – சிவி சண்முகம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு. … Read more

#BREAKING: அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது – சிவி சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம். சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரும் புதிருமாக மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசத்துடன் தெரிவித்தார். பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவி … Read more