தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு! மீறினால் கடும் நடவடிக்கை!

உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு. அதிகாரிகள் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை செயல்படுத்தாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை … Read more

#BREAKING: ஆடர்லி முறை; அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவு!

ஆடர்லி தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆடர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை … Read more

முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் – சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கோரி மனு

அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை … Read more

#BREAKING: சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! – டிஜிபியிடம் புகார்!

சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார். அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி … Read more

#Breaking:இரவில் விசாரணை நடத்தக்கூடாது – டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி … Read more

#BREAKING: மாணவி தற்கொலை வழக்கு – தமிழக காவல்துறை மேல்முறையீடு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை மேல்முறையீடு. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த நிலையில், அண்மையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மாணவி தற்கொலை வழக்கை … Read more