தமிழகத்தில் 1,847 காவலர்கள் இடமாற்றம்! – டிஜிபி உத்தரவு

tn police

தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், குறிப்பாக ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.  அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே … Read more

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

chennai high court

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் … Read more

குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடலாம் – டிஜிபி

கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி. நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக்கூடாது என்றும் நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக நடத்தப்படும் கொலைகளை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். நிலையில் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.  மேலும், … Read more

காவல்துறை அதிகாரிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – இன்று முதல் அமல்!

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை. புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31முதல் அமலுக்கு … Read more

விஷவாயு தாக்கி 4 பேர் பலி.! தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

கரூரில் 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , செப்டிக் டேங்க் உள்ளே இருக்கும் சவுக்கு காம்புகளை அவிழ்க முற்பட்ட உள்ளே இறங்கியபோது 4 தொழிலாளர்கள் விஷ வாயு … Read more

#BREAKING: கோடநாடு வழக்கு – விசாரணை அதிகாரி நியமனம்!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் … Read more

#BREAKING: 199 உதவி ஆய்வாளராகள், ஆய்வாளராக பதவி உயர்வு – டிஜிபி உத்தரவு

உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

#JustNow: கோடநாடு வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்! – டிஜிபி உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஓட்டுநர் … Read more

புகார் தர வருவோரை கேலி செய்ய கூடாது.. கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.! டிஜிபி சுற்றறிக்கை.!

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.   காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். … Read more

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளது – டிஜிபி

10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலு, இதுகுறித்து அவர் கூறுகையில், 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன. 2021 இல் நான்கு மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே … Read more