#BREAKING: அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது – சிவி சண்முகம் ஆவேசம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்.

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரும் புதிருமாக மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசத்துடன் தெரிவித்தார். பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவி சண்முகம் குறுக்கிட்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முழக்கமிட்டு ஆவேசத்துடன் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான். இதனால், ஒற்றை தலைமை தேர்ந்தெடுத்த பின்னர், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமி மேடையில் தெரிவித்தார். இதனால், பரபரப்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here