16 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு..!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இன்று அதிகமானோர் யூடியூப்பில் தான், தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில், யுடியூப் சேனல்களில் பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் இடம்பெறுவது வழக்கம். இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் … Read more

#Breaking:பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “Y” பிரிவு பாதுகாப்பு!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு “Y” பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் “Y” பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. “Y “பிரிவு பாதுகாப்பு: அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக நுண்ணறிவு பிரிவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம்,அண்ணாமலைக்கு “Y “பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதன்காரணமாக,அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 … Read more

கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் படிப்படியாக குறைவு- மத்திய அரசு..!

வங்கிகளில் கடந்த 2016 முதல் 2021 வரை ரூ.1,00,000-க்கு மேல் நடைபெற்ற மோசடிகள்  குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர்  பகவத் காரத் வெளியிட்டார். அதன்படி தனியார் வங்கியான கோடக் மஹிந்திராவில் 2016-2017-ம் நிதி ஆண்டில் 135 மோசடிகள் நடந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 642 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகளும், இண்டஷன் வங்கியில் 377 மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் … Read more

இன்னும் சில 100 இந்தியர்கள் கார்கீவ் நகரில் சிக்கியிருக்கலாம் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது.  இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு இந்தியர்களை மீட்கும் பணியில் … Read more

தேசிய உயர் கல்வித் தகுதிக்கான வரைவு அறிக்கை வெளியீடு- பல்கலைக்கழக மானியக் குழு!

புதிய  கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு. தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைத்து, மாணவர்கள் பயில்வதற்கான வழிமுறையுடன் புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் idpnep2020@gmail-க்கு அனுப்ப வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை … Read more

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்கிற முயற்சியை கைவிட வேண்டும் – சசிகலா

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்கிற முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி சசிகலா அறிக்கை! இதுதொடர்பாக சசிகலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் கொண்டுவரப் போவதாக வரும் செய்திகள், மாநில உரிமைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தகூடும் என்று பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில், மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் இந்த புதிய முயற்சியை கைவிட்டு, ஏற்கனவே இருக்கின்ற நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இந்திய ஆட்சிப்பணிகளை தேர்வு செய்து … Read more

இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு … Read more

#Breaking:”பட்டினிச் சாவு இல்லை என்று எப்படி கூற முடியும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி:நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்று எப்படி கூற முடியும்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக நாளிதழில் செய்திகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்த நிலையில்,நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு … Read more

#Breaking:அதிகரிக்கும் கொரோனா..”அனைத்து மாநில அரசுகளும் இதனை உடனே செய்ய வேண்டும்”- மத்திய அரசு கடிதம்!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஆக்சிஜன் கையிருப்பை உடனே உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ,ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு,கடிதம் … Read more

#BREAKING: நாளை சுகாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!

நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more