கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகள் படிப்படியாக குறைவு- மத்திய அரசு..!

வங்கிகளில் கடந்த 2016 முதல் 2021 வரை ரூ.1,00,000-க்கு மேல் நடைபெற்ற மோசடிகள்  குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர்  பகவத் காரத் வெளியிட்டார். அதன்படி தனியார் வங்கியான கோடக் மஹிந்திராவில் 2016-2017-ம் நிதி ஆண்டில் 135 மோசடிகள் நடந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 642 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகளும், இண்டஷன் வங்கியில் 377 மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 3 ஆண்டுகளில் மோசடி எண்ணிக்கை பெரிதும்  குறைந்துள்ளது. அதில் டிசம்பர் வரை 9 மாதங்களில் 283 மோசடிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 வங்கி மோசடிகளை தடுக்க கடுமையான கண்காணிப்பு முறைகள் பின்பற்றப்படுவதால் 2016 -17 ல் ரூ.61,229  கோடிக்கு  நடந்த மோசடிகள் நடப்பு நிதியாண்டில் 9 மாதங்களில் 648 கோடியாக குறைந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

 

author avatar
Jeyaparvathi