#Breaking:பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “Y” பிரிவு பாதுகாப்பு!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு “Y” பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.அச்சுறுத்தல் காரணமாக அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் “Y” பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

“Y “பிரிவு பாதுகாப்பு:

அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக நுண்ணறிவு பிரிவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம்,அண்ணாமலைக்கு “Y “பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதன்காரணமாக,அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக மீது விமர்சனம்:

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அரசையும்,முதல்வர் ஸ்டாலினையும் பாஜக மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

முதல்வருடன் பறந்த ரூ.5 ஆயிரம் கோடி:

அந்த வகையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை.அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது.முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி,ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன என்று முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சித்தார்.இதற்கு ஆர்எஸ் பாரதி கண்டனம் தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு எச்சரிக்கை:

மேலும்,முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும்,நோட்டீஸ் அனுப்பிய 24 மணிநேரத்திற்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடரப்படும் எனவும் ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

திராணி இருந்தால் கைது:

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை தெம்பு திராணி இருந்தால் தக்க ஆதாரத்தை கொடுத்து தன்னை கைது செய்து அழைத்து செல்லட்டும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.