இன்னும் சில 100 இந்தியர்கள் கார்கீவ் நகரில் சிக்கியிருக்கலாம் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது.  இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உக்ரைனில் இருந்து பெரும்பாலான இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இன்னும் சில 100 இந்தியர்கள் கார்கீவ் நகரில் சிக்கியிருக்கலாம். அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது, அதிக தாக்குதல் நடைபெறுவதால் இந்த நகரில் இருந்து நடந்தாவது  வெளியேறுங்கள் என நேற்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.