தன்னை விட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மானை விழுங்கிய மலைப்பாம்பால் பரபரப்பு…!!

புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியில் தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 11 அடி நீளமும், 14kg எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.அப்போது அதனால் நகர முடியாமல் அதிகமாக சிரமப்பட்டுள்ளது.பின்பு அந்த மானை முழுவதுமாக கக்கியுள்ளது. பின்னர் இது அங்கு … Read more

மத்திய அரசு அதிரடி!மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமை குறைப்பு……

மத்திய அரசு அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமைத் தொகையை  அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்,  மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விற்பனையில் காப்புரிமைத் தொகை மான்சாண்டோ நிறுவனம் பெற்று வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இதற்கான காப்புரிமை தொகையை 70 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில், தற்போது மேலும் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், … Read more

பாலியல் உறவு வைத்திருந்த அதிபர் டிரம்ப்?ஆபாச நடிகையிடம் வெளியில் வாய் திறக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தம்?

பாலியல் உறவு வைத்திருந்த ஆபாச நடிகை, தமக்கு வழங்கப்பட்ட தொகையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம்   திருப்பி அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels) என்ற அந்தப் பெண், டிரம்புடன் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் வாய் திறக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு அதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக அதிபரின் வழக்கறிஞரே கூறி இருந்தார். இதுதொடர்பாக தற்போது வழக்கு தொடர்ந்துள்ள அந்த நடிகை, … Read more

காஞ்சிபுரத்தில் இருந்து அமெரிக்கா சென்ற சிலை …அமெரிக்காவில் உள்ள ஏசியன் அருங்காட்சியகத்தில் விற்பனை?

அமெரிக்காவில் உள்ள ஏசியன் அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. சிதிலம் அடைந்துவிட்டதாக கூறப்பட்ட சிலை அழகுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 1509 ம் ஆண்டு, விஜய நகர பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், சுமார் 10 சிலைகள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதாக வரலாற்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் வழங்கப்பட்ட பழமையும் தொன்மையும் வாய்ந்த … Read more

பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்த அதிசய நாடு!

பள்ளி ஆசிரியர்கள் துப்பாக்கி  அமெரிக்காவில் வைத்துக்கொள்ள ஆதரவளிப்பதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை, துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தும் கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் என்ற பள்ளியில் முன்னாள் மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து, மாணவர்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் கைத்துப்பாக்கிகள் வைத்துக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், துப்பாக்கிகள் வாங்குவதற்கான வயதையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். … Read more

அமெரிக்கா கேப்பிடல் பிளாஸா அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்ப்பு!

பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று  அமெரிக்காவின் கென்டகி பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ஃபிராங்க்ஃபோர்ட் (Frankfort) என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த கேப்பிடல் பிளாஸா என்ற கட்டடம் பழுதடைந்து காணப்பட்டதால் அதனை இடித்து புதிய கட்டடம் கட்ட அதன் உரிமையாளர் முடிவு செய்தார். இதையடுத்து அந்தக் கட்டடத்தில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் வெடிமருந்துகள் ஒரே நேரத்தில் வெடிக்கவைக்கப்பட்டு கேப்பிட்டல் பிளாஸா சில நொடிகளில் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உலகில் அதிக அளவில் பி.ஹெச்டி (PhD graduates) பட்டம் பெற்றவர்களில் இந்தியாவிற்கு 4வது இடம்…!!

உலகத்தில் எந்தெந்த நாடுகளில் டாக்டர் பட்டம் (PhD graduates),அதாவது முனைவர் பெற்ற பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் என்ற பட்டியலை இன்று உலக பொருளாதார மையம் (World Economic Forum‏) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமெரிக்கா 67,449 பட்டதாரிகளுடன் முதல் இடத்திலும்,ஜெர்மனி 28,147 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 25,020 பட்டதாரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 24,300 பட்டதாரிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 16,039 பட்டதாரிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் 13,729 பட்டதாரிகளுடன் ஆறாவது இடத்திலும்,தென்கொரியா 12,931 பட்டதாரிகளுடன் … Read more

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவுக்கு பதிலடி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை  மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்பிசி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அமெரிக்காவில் யூதர்களும், உக்ரேனியர்களும் ரஷ்யக் குடியுரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்களின் தலையீடு இருந்திருக்கலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்கர்களே நிதியுதவி செய்திருக்கலாம் என்றும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

நாசா பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க திட்டம்!

நாசா விஞ்ஞானிகள்  பூமியை நோக்கி விழும் விண்கல்லால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அணு ஆயுதத்தை ஏவி அதனை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக வல்லுனர் குழு ஒன்று தீவிரமாக ஆலோசித்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் விண்கல்லை வழிமறித்து அதனை சிறிய துண்டுகளாக சிதறடிப்பதா அல்லது அணு ஆயுதத்தை ஏவி முழுவதுமாக அழித்து விடுவதா என்று ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதத்தைப் பயன்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பென்னு( … Read more

அமெரிக்கா தலிபான்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்தாது!

அமெரிக்கா  ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சு நடத்தும் வரை அந்த அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சு நடத்தாது என தெரிவித்துள்ளது. தலிபான்கள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு முன்வருமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அதில் தலிபான்கள் ஆப்கன் அரசுடன் பேச்சு நடத்தும் வரை அந்த அமைப்பினருடன் அமெரிக்கா நேரடியாகப் பேச்சு நடத்தாது எனக் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.