உலகில் அதிக அளவில் பி.ஹெச்டி (PhD graduates) பட்டம் பெற்றவர்களில் இந்தியாவிற்கு 4வது இடம்…!!

உலகத்தில் எந்தெந்த நாடுகளில் டாக்டர் பட்டம் (PhD graduates),அதாவது முனைவர் பெற்ற பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர் என்ற பட்டியலை இன்று உலக பொருளாதார மையம் (World Economic Forum) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் அமெரிக்கா 67,449 பட்டதாரிகளுடன் முதல் இடத்திலும்,ஜெர்மனி 28,147 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 25,020 பட்டதாரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 24,300 பட்டதாரிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 16,039 பட்டதாரிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ் 13,729 பட்டதாரிகளுடன் ஆறாவது இடத்திலும்,தென்கொரியா 12,931 பட்டதாரிகளுடன் ஏழாவது இடத்திலும்,ஸ்பெயின் 10,889 பட்டதாரிகளுடன் இரண்டாவது இடத்திலும்,இத்தாலி 10,678 பட்டதாரிகளுடன் எட்டாவது இடத்திலும்,ஆஸ்திரேலியா 8,400 பட்டதாரிகளுடன் ஒன்பதாவது இடத்திலும்,கனடா 7,059 பட்டதாரிகளுடன் பத்தாவது இடத்திலும், துருக்கி 4,516 பட்டதாரிகளுடன் 11வது இடத்திலும், இந்தோனேசியா 3,591 பட்டதாரிகளுடன் 12வது இடத்திலும்,ரஷ்யா 2,223 பட்டதாரிகளுடன் 13வது இடத்திலும்,தென் ஆப்ரிக்கா 20,060 பட்டதாரிகளுடன்  14வது இடத்திலும் முறையே உள்ளன.மேலும் இப்பட்டியலானது கடந்த 2014ஆம் ஆண்டின் தரவுகளின் மூலமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment