திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு அவருக்கான  உரிமையானது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். “திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை … Read more

பேராசிரியர்கள் தேவை.. ஜூன் 18க்குள் விண்ணப்பிக்கலாம் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில், 20 … Read more

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!-ஹரியானா சிறுவன் பலி..!

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்துள்ள சிறுவன் ஒருவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை ஏவியன் இன்புளூயன்சா என்ற வைரஸ் தாக்கி பறவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலை பறவை காய்ச்சல் என்றழைக்கிறோம். இது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் எச்5என்8 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-இல் நிறைவடையும்-எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

மதுரை மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு முடிவடையும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கட்டோச்சி தலைமையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள 17  பேர் உடைய நிர்வாக குழுவினரின் முதல் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.பி.மாணிக்கம் தாகூர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவடையும்  என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் … Read more

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க முழு ஒத்துழைப்பு – தமிழக அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்னும் நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்ததாகவும், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தற்போது … Read more

எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறைவு – எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் பாதிப்பு குறித்து பலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில் எய்ட்ஸ் நோயாளிகளிடையே கொரோனா வைரஸ் பரவல் மிக குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ துறையின் … Read more

இந்தியா அடுத்த 6- 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளலாம் – எய்ம்ஸ் இயக்குனர்!

இந்தியா அடுத்து வருகிற 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருந் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட உள்ளதாக பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் … Read more

#BREAKING: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி..!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ரமேஷ் பொக்ரியால் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தனது வெற்றிக்கு மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்த கிஃப்ட் பாருங்க

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர் இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 124 இடங்களிலும், … Read more

ஜனாதிபதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்..!

ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் எய்ம்ஸுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 75 வயதான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.