மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட அடிக்கல்லையே காணவில்லை-அழகிரி..!

தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்  மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், … Read more

எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மூச்சு திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரக்யா சிங் தாக்கூர் போபாலைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4.15 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் உள்ள ஒரு தனியார் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் … Read more

குஜராத்தில் தொடங்கிய பணி.. மதுரை எய்ம்ஸ் குறித்து RTI-ல் வெளியான தகவல்.?

நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் எய்ம்ஸ் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தென்காசிப் பாண்டிய ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், எத்தனை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தில் நிதி கேட்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து கடன் கோரப்பட்டுள்ளது. இந்தியாவில் மீதமுள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கு … Read more

ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிச. 31-ல் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காந்தேரி கிராமத்திற்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 1,195 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, 201 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவுள்ளதாகவும், அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31 ஆம் … Read more

எய்ம்ஸ் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!

எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 6-வது மத்திய ஊதியக்குழு உட்பட அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) செவிலியர் சங்கத்திற்கு பல கோரிக்கைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இதனால், தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி செவிலியர் சங்கம் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. செவிலியர்களின் வேலைநிறுத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் பயத்தை அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், எய்ம்ஸ் இயக்குனர் … Read more

அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரி IMA ஆர்ப்பாட்டம்.. எய்ம்ஸ் நிர்வாகம் ஆதரவு!

ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்தொரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், நீட் நுழைவு தேர்வு எழுதிய பின்னரே அறுவை சிகிச்சை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். … Read more

பிரபல நிறுவனத்தில் வேலை.., ரூ.67,700 சம்பளம்.., வாய்ப்பை தவறவிடாதீர்கள்.!

புதிய வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளை சத்தீஸ்கரில் 142 Senior Resident (Group A) காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காலியிடங்கள்: 142, பணி: Senior Resident (Group A) கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் MD/MS/DNB /Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், DMC/DDC/MCI முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 … Read more

“கோவாக்சின்” கொரோனா  தடுப்பூசியின் 3 கட்டம் சோதனையை எய்ம்ஸில் தொடக்கம்.!

பாரத் பயோடெக் தயாரிக்கும் “கோவாக்சின்” கொரோனா  தடுப்பூசியின் 3 கட்டம் சோதனையை எய்ம்ஸில் தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் ‘கோவாக்சின்’ உருவாக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சினின் 3-ஆம் கட்டம் மனித மருத்துவ பரிசோதனை நேற்று எய்ம்ஸில் முதன்மையான நிறுவனத்தில் உள்ள நரம்பியல் மையத்தின் தலைவர் டாக்டர் எம் வி பத்ம ஸ்ரீவாஸ்தவா மற்றும் மூன்று தன்னாலவர்கள் முதல் அளவைப் பெற்றனர். எய்ம்ஸில் சுமார் … Read more

#BREAKING: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக “வி.எம்.கடோச்” நியமனம்.!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக “வி.எம்.கடோச்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1,264 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மதுரையில் 1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும்  டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய … Read more