ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிச. 31-ல் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காந்தேரி கிராமத்திற்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 1,195 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, 201 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவுள்ளதாகவும், அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31 ஆம் தேதி காணொளி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல், அமைச்சர்கள், உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குநராக ஷ்ரம்தீப் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.