மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-இல் நிறைவடையும்-எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

மதுரை மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு முடிவடையும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கட்டோச்சி தலைமையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள 17  பேர் உடைய நிர்வாக குழுவினரின் முதல் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.பி.மாணிக்கம் தாகூர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவடையும்  என்று தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் அமையவுள்ள 16 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது உறுதியாகியுள்ளது.  மேலும், இதற்காக ரூ.1,678 கோடி கட்டிட பணிகளுக்காக ஜப்பான் நிறுவனத்திடம் கடன் வாங்கவுள்ளதாகவும், மீதம் 300 கோடியை மத்திய அரசு தர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு 2023 இல் கட்டிட பணிகள் துவங்கப்பட்டு 2026 இல் முடிவடையவுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்கை தொடங்க அனுமதியளித்துள்ளது.

இவர்களுக்கான வகுப்பறை, தங்குமிடம் போன்றவை குறித்து சிவகங்கை, தேனி மருத்துவக்கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்வது குறித்து தமிழக அரசு ஒரு மாதத்தில் முடிவெடுக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.