பொது இடங்களில் மது அருந்த தடை.? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.   டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை … Read more

தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது – முதல்வர் பசவராஜ்!

தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தமிழக அரசு காவிரி நீரை பங்கிட்டு காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் காவிரி நீர் பங்கிடப்பட்டு பெரிய அளவில் நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். இந்நிலையில், இது தொடர்பாக நேற்று திருப்பதியில் நடந்த தென் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரி … Read more

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க முழு ஒத்துழைப்பு – தமிழக அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்னும் நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்ததாகவும், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தற்போது … Read more

“85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்க கூடாது” -வைகோ..!

85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமைமிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை விற்க கூடாது என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கக் கூடாது என,தமிழக அரசுக்கு,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது,10.02.1937 ஆண்டில்,மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டது.பின்னர்,1969ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து … Read more

#Breaking:27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தேநீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.இதனால்,பல்வேறு தரப்பினரும் தேநீர் கடைகளை திறக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 … Read more

“ஒருநாள் போதாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு..!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதேபோல்,மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தற்கு,மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திமுக முன்னாள் தலைவரும்,தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில்,ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில்,மதுரையில் வசிக்கும் வெங்கடேசன் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 சிறப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் தயார்…!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 சிறப்பு பொருட்கள் வழங்குவதற்காக டோக்கன் அட்டை தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையான 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக,குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும்,14 பொருட்கள் அடங்கிய … Read more

“அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நிபுணர் குழு” – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில்,தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிக் காலத்தையும் சேர்த்துக்கொள்ளக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் … Read more

#Breaking:”மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு;தமிழக அரசு அமைக்க வேண்டும்”-உயர்நீதிமன்றம் உத்தரவு…!

மத்திய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க வேண்டும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன.அவற்றில் 8450 கோயில்களானது,100 ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்தவையாக உள்ளன என்றும், மேலும்,6414 கோயில்கள் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும்,530 கோயில்கள் பாதி சேதமடைந்ததாகவும், 716 கோயிகள் முழுமையாக சேதமடைந்ததாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,இக்கோயில்களை முறையாக சீரமைக்கப்படுவதாகவும் அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கை … Read more

#Breaking: தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு…!

27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் . தமிழக அரசு உத்தரவு. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,மீண்டும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, எஸ்.பி.க்களாக : செங்கல்பட்டுக்கு- விஜயகுமார் நியமனம். காஞ்சிபுரத்திற்கு – சுதாகர் திருப்பத்தூர்க்கு- சிபி சக்கரவர்த்தி, ராணிப்பேட்டைக்கு – ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலைக்கு – பவன்குமார் ரெட்டி, விழுப்புரத்திற்கு – ஸ்ரீநாதா, கடலூர்க்கு- சக்தி … Read more