தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…

dmdk and admk

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. Read More – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..! தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் வலுவான கூட்டணி கட்சிகளுடன் மக்களவை … Read more

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனது தலைமையில் வரும் 29ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி … Read more

நாடாளுமன்ற தேர்தல்- அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம்..!

admk

மக்களவைத் தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் குழு என தனி தனியாக அனைத்து கட்சிகளும் குழுக்களை அறிவித்து உள்ளனர். திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அதிமுக மற்றும் பாஜக தற்போது வரை கூட்டணி குறித்து … Read more

யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்!

elephant

கோவை அருகே ஆபத்தான முறையில் யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. பாதுகாக்கப்பட்ட நவமலை பகுதியில் காரை ஒட்டி சென்ற பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் மிதுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர் ஒளிவிளக்கு (ஹை பீம் லைட்) பொருத்திய வாகனத்தை மலைச்சாலையில் இயக்கி, அப்பகுதியில் வந்த யானையை ஆபத்தான முறையில் விரட்டியதாக வனத்துறை குற்றச்சாட்டியுள்ளது. மலைச்சாலையில் உயர் ஒளியுடன் வந்த வாகனத்தை கண்டு … Read more

எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி – ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

ops and eps

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து திமுகவின் ஊதுகுழலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டங்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும் என்று கூறியவர் எடப்பாடி … Read more

கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு சிதைகிறது – சி.வி சண்முகம்

CV Shanmugam

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தலைமையில் ரோடியர் மில் (AFT ) திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது சிவி சண்முகம் கூறியதாவது, 80க்கு பிறகு புதுச்சேரியை காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, பாஜக தான் ஆண்டு வருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் இவர்களால் புதுச்சேரியில் எந்த வளர்ச்சியாவது இருக்கிறதா? என்றும் புதுச்சேரியில் கூட்டணி … Read more

எம்ஜிஆர் முகத்தால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது… இபிஎஸ் பேச்சு!

edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு … Read more

அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி – ஈபிஎஸ்..!

Edappadi Palaniswami

நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின்  பூத்  கமிட்டி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  பேசினார். அப்போது” நாமக்கல்லை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவர் தங்கமணி, இன்றைய முதலமைச்சர் அதிமுக மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார். சாதனைகளை வலைதளம் வாயிலாக கொண்டு சேர்ப்பது ஐ.டி.விங்கின் கடமை. மரணஅடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுகவில் தான் ஒரு கிளைச் செயலாளர் முதலமைச்சராக முடியும், அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.!

BJP - AIADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எஞ்சிய நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல்களை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என … Read more

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது – ஐகோர்ட்

chennai high court

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் … Read more