குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன் இனி சுயேட்சையாகத்தான் தேர்தலில் நிற்க முடியும்…! அதிமுக எம்.பி

தீபா போலதான் தினகரன்… சுயேட்சை வேட்பாளராகதான் ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் போட்டியிடமுடியும் ஆர்.கே.நகரில் பாஜக ஆதரவை நினைத்து கவலைப்படும் அளவிற்கு அவர்களது நிலை இல்லை என நான் நினைக்கிறேன். இரட்டை இலை இப்போதுதான் கிடைத்திருக்கிறது, வரக்கூடிய காலக்கட்டத்தில் சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என ஆளுனரை சந்தித்த பின்பு பேட்டியளித்தார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்

MGR நூற்றாண்டு விழாவால் நேர்ந்த விபரீதம்…!

வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது. இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண … Read more

இரட்டை இலை விவகாரத்தில் குரல் மாதிரியை தர எதிர்த்து T.T.V.தினகரன் சார்பில் மனு

இரட்டை இலை சின்னம் பெற சசிகலா தினகரன் அணி சார்பாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து TTV.தினகரன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் குரல் மாதிரியை கேட்பது மக்கள் அடிப்படை உரிமைக்கு எதிரானது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் தேதிதான் விசாரிக்க உள்ளதாம்  

இரட்டை இலை கைபற்றப்பட்டது : தொண்டர்கள் உற்சாகம்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்றார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைத்தனர். பின்னர் சசிகலா தரப்புக்கும் இபிஎஸ்-ஒபிஎஸ் தரப்புக்கும் கட்சியும் சின்னமும் எங்களுக்குத்தான் என சண்டை போட்டுகொண்டனர்.   பிறகு இது தேர்தல் ஆணையம் வரை சென்றது. சசிகலா தரப்பும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பும் கட்சியும் ஆட்சியையும் எங்களுக்குத்தான் என தங்கள் தரப்பு ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தனர். … Read more

ஜெ. கைரேகை பொய்யானது!தி.மு.க. சார்பில் விசாரணை ஆணையத்தில் தகவல் ….

  தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட முன்னால் முதல்வர்  ஜெயலலிதா கையெழுத்து பொய்யானது , உயிரோடு எடுக்கப்படும் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் ஜெயலலிதா கைரேகை எனச் சொல்லப்படும் கைரேகையில் இல்லை – திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஜெயலலிதா  மரண விசாரனை ஆணையத்தில் தகவல். இடது புறம் உள்ளது ஜெயலலிதா  கைரேகை  வலது புறமுள்ளது உயிரோடு உள்ள சாதாரண மனிதனின் கைரேகை என்று அவர் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் நேற்று உத்தரவை நீதிபதி ஆறுமுகசாமி பிறபித்தார். … Read more

இரு மனங்களும் ஒன்றாக இணையவில்லை : இது தொண்டர்களின் கருத்து : அதிமுக

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பிறகு சசிகலா தரப்பு தங்கள் ஆதரவு MLA-க்களை வைத்து கொண்டு எடப்பாடி.K.பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பிறகு எடப்பாடி.பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர் இதனால் கோபமடைந்த சசிகலா தரப்பு சின்னமும் கட்சியும் எங்களுக்குதான் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியில் ஒன்று சேர்ந்தாலும் … Read more