இரட்டை இலை கைபற்றப்பட்டது : தொண்டர்கள் உற்சாகம்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்றார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைத்தனர். பின்னர் சசிகலா தரப்புக்கும் இபிஎஸ்-ஒபிஎஸ் தரப்புக்கும் கட்சியும் சின்னமும் எங்களுக்குத்தான் என சண்டை போட்டுகொண்டனர்.

 

பிறகு இது தேர்தல் ஆணையம் வரை சென்றது. சசிகலா தரப்பும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பும் கட்சியும் ஆட்சியையும் எங்களுக்குத்தான் என தங்கள் தரப்பு ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தனர். இதன் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் கட்சியும், சின்னமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குதான் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு அவர்கள் தாக்கல் செய்த பிராண பத்திரங்கள் எம்எல்ஏக்கள், எம்பிகளின் ஆதரவு அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment