கட்சி தொடங்குவேன் ஆனா எப்போன்னு அப்றோம் சொல்லுவேன்!ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி  காவல் துறையினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என கூறினார். அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினி தனது போய் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,என்னை பற்றிய அரசியல் விமர்சனம் தவிர்க்க இயலாதது. நான் கட்சி துவங்குவது உறுதி, எப்போது துவங்குவேன் என்பதை கூறமுடியாது. அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சீருடையில் உள்ள போலீசாரை தாக்குவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிர்மலா தேவி விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. குற்றம் … Read more

போலி ரூபாய் நோட்டுகள் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் ஒன்றில் வந்ததால் பரபரப்பு!

ஏடிஎம் ஒன்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தின் பரேலி நகரின் ஒரு அங்கமான சுபாஷ் நகரில் உள்ள யுனைடெட் வங்கி ஏடிமில்  அசோக் குமார் பட்னாயக் என்பவர் பணம் எடுக்கச் சென்றார். 4500 ரூபாயை அவர் எடுத்த போது இரண்டு போலி 500 ரூபாய் நோட்டுகளும் அதில் கலந்திருந்தன. அவருக்கு முன்பு பணம் எடுத்த பிரவீண் உத்தம் என்பவருக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது. அவர்கள் எடுத்த பணத்துடன் சில்ரன் … Read more

அதிமுக-பாஜக உறவு தொடர்பான கட்டுரை விவகாரம்:கட்டுரை எழுதிய திருமலை, பன்னீர்செல்வம் பணியில் இருந்து நீக்கம் !

அதிமுக-பாஜக உறவு தொடர்பான நமது அம்மா நாளிதழ் கட்டுரை விவகாரத்தில் கட்டுரை எழுதிய திருமலை, நாளிதழ் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ” நமது புரட்சித் தலைவி அம்மா” ,அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தது.அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் மத்திய மாநில … Read more

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த்தி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டன. புதுக்கோட்டையில் வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டார். புதிய பேருந்து நிலையம் தொடங்கி, பல்வேறு வீதிகளைக் கடந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் கைகோர்த்து நின்றனர். சென்னையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் முன்பு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி … Read more

காங்கிரஸ் தொடங்கியுள்ள இயக்கம் வாரிசு அரசியலைக் காப்பதற்கான நடவடிக்கை!பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அரசியலமைப்பைக் காப்போம் என்கிற முழக்கத்துடன் காங்கிரஸ் தொடங்கியுள்ள இயக்கம் அதன் வாரிசு அரசியலைக் காப்பதற்கான நடவடிக்கை என  தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு சிக்கல்கள் தலைவிரித்தாடும்போது பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் குறியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமித் ஷா, மோடி மீதான எதிர்க்கட்சிகளின் வெறுப்பு, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்ர். ராணுவம், நீதித்துறை, உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், … Read more

காவிரி மேலாண்மை வாரியம் :தூத்துக்குடியில் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் 1000 க்கும் மேற்ப்பட்டோர் மனித சங்கிலி அறப்போராட்டம்!

தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை … Read more

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி  பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக இழிவான பதிவைப் பகிர்ந்திருந்தார். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளிப்பை … Read more

திருவள்ளூர் அருகே கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் மனு !

கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஊருக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் .2016இல் மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஒரு தரப்பினர் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தீபக் மிஸ்ரா விவகாரம்:காங்கிரஸ் கடும் கண்டனம் !முடிவெடுக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை !

காங்கிரஸ் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கோரிய நோட்டீஸ் தொடர்பாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்,  இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 … Read more

ரூபாய் 6 லட்சம் சென்னையில் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை! தப்பி ஓடிய கொள்ளையனை பிடித்து போலீசார் விசாரணை

இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கபட்டது . சென்னை அடையார் பகுதியில் அமைத்துள்ள இந்தியன் வங்கியின் உள்ளே முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர், பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று, அங்கே வரிசையில் நின்ற ஒருவரிடம், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். வங்கியில் பணம் செலுத்த நின்றவரின் கையில் இருந்த 6 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார். உடனடியாக வங்கியில் இருந்த பொதுமக்களும், வங்கி பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரும் அந்த திருடனை … Read more