பீகாரில் ஹோமியோபதி மருந்துகளை வைத்து கள்ளச்சாராயம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாடுகளுக்கு  முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் 200 பேர்.? அதிர்ச்சி தகவலை கூறிய பாஜக எம்.பி ஆர்.கே.சிங்.!

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஆளும் நிதிஷ்குமார் அரசு மறைகிறது என பாஜக எம்பி ஆர்.கே.சிங் குற்றம் சாட்டினார்.  மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் அண்மையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து பேசிய பாஜக எம்பியும், பீகார் மாநில பாஜக முக்கிய தலைவருமான ஆர்.கே.சிங் கூறுகையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் … Read more

50ஆக உயர்ந்த பீகார் கள்ளச்சாராய உயிரிழப்பு.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.  பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரையில் இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது  50ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்க பீகார் போலீசார் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை செய்து வருகின்றனர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் … Read more

1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது

பஞ்சாபில் 1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம்  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பஞ்சாபின் கலால் துறையினர் வெள்ளிக்கிழமை(செப் 2) லூதியானாவில் ஆற்றங்கரைக்கு வெளியே ஒரு இடத்தில் கள்ளச்சாராயம்  தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.45 லட்சம் லிட்டர் லஹான் என்ற மூலப்பொருளை மீட்டு அழித்தனர். மாநில அமைச்சரான ஹர்பால் சிங் சீமா கூறுகையில், “மது மாஃபியாவின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என்று கூறினார். சட்டவிரோதமாக யாராவது கள்ள சாராயம் தயாரிக்கிறார்களா என … Read more

மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த ஊரில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது வெட்கக்கேடு! – ராகுல் காந்தி

மகாத்மா காந்தி அவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் பிறந்த மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் கவலைக்குறியது ராகுல் காந்தி ட்விட்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வறண்டு கிடக்கும் குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் பாழ் பட்டுக்கிடக்கிறது. பில்லியன் மதிப்புகள் கொண்ட போதைப் பொருட்கள் … Read more

அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் திமுக ஆட்சியில் ஆறாய் ஓடுகிறது – ஈபிஎஸ்

காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்.  கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை … Read more

பீகார் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம் சோட்டா பகாரி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்து உள்ளனர். அதன் பின் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள ஒரு தெரு ஓரத்திலே படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களை காணாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர்களை தேடி சென்று எழுப்பியுள்ளனர். அப்பொழுது 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்து … Read more

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்திய 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் யாரென்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் உபேந்திரநாத் வர்மா அவர்கள் இது இயற்கைக்கு மாறான ஒன்று எனவும், முதல் கட்ட விசாரணை … Read more

பீகார் : கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு …!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து உயிர் இழந்துள்ளனர். பீகாரில் கடந்த 5 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்க கூடிய கும்பல் அதிகரித்துள்ளதுடன், இதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ருபாலி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்துள்ளனர். அப்பொழுது அக்கிராமத்தை சேர்ந்த பல மது … Read more