60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு  கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு … Read more

#Breaking : டாஸ்மாக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை … Read more

ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதல் விலை.! 4.61 கோடி ரூபாய் அபராதம் விதித்த டாஸ்மாக்.!

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன.  தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். … Read more

#BREAKING:புதிய டாஸ்மாக் கடைகளை மக்களே தடுக்க சட்டத்திருத்தம் – தமிழக அரசு

புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு … Read more

பீகார் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம் சோட்டா பகாரி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்து உள்ளனர். அதன் பின் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள ஒரு தெரு ஓரத்திலே படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களை காணாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர்களை தேடி சென்று எழுப்பியுள்ளனர். அப்பொழுது 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்து … Read more

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மது விற்பனை ….!

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் … Read more

#Breaking:தமிழகம் முழுவதும்…நேற்று ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா?..!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகள் செயல்படாது என … Read more

புத்தாண்டு – இந்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி!?

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட தடையால் டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலம் – ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் – ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் – ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் … Read more

கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் … Read more

ஆக்ரா: போலி மது அருந்திய 10 பேர் உயிரிழப்பு..!

ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more