அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் திமுக ஆட்சியில் ஆறாய் ஓடுகிறது – ஈபிஎஸ்

காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். 

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை,ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக, பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது.மெரினா கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள்,போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது.

எனவே, அம்மா அரசின் ஆட்சியில் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ,அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment