பீகார் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம் சோட்டா பகாரி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்து உள்ளனர். அதன் பின் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள ஒரு தெரு ஓரத்திலே படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களை காணாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர்களை தேடி சென்று எழுப்பியுள்ளனர்.

அப்பொழுது 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்து இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்துள்ளது.