கட்டணமின்றி சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள் …..

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கபடுகின்றது . சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கட்டணமின்றி தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது…இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் …. source: dinasuvadu.com

ஆர்கே நகரில் கமலுக்கு எதிராக ஆர்பாட்டம் : உருவபொம்மையை எரிக்க முயன்ற டிடிவி ஆதரவாளர்கள்

ஆர்கே நகர் இடைதேர்தலில் டிடிவி.தினகரன் சுய்ர்ட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அனைத்து கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் ஜனநாயகம் தோற்று விட்டது என்பது போல் டிவிட் செய்திருந்தார். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி.தினகரன் ஆர்கே நகர் மக்களை இழிவுபடுத்தும் விதமாக கமலஹாசன் கருத்து சொல்லியிருக்கிறார். என்று கூறியிருந்தார். இந்நிலையில் டிடிவி ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் கமலஹாசனுக்கு எதிராக போராட்டம் … Read more

அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தினால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கம் மூலம் 80% பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். source : dinasuvadu.com

உலகநாயகன் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வபோது டிவிட்டரில் தனது அரசியல் கருத்துகளையும், அரசின் மீதான விமர்சனங்களையும் தெரிவித்தது வருகிறார். இதனால் அரசியல்வாதிகளும் அவரின் டிவிட்டுக்கு அவ்வபோது பதில் கருத்துகளையும் கூறிவந்தனர். இந்நிலையில் கமலஹாசன் வீட்டை இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது வீட்டிற்கு தற்போது போலிஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. source : dinasuvadu.com

தமிழகத்தில் பேருந்துகள் ஓடாததால் மக்கள் கடும் அவதி ! தூத்துக்குடி, சிவகங்கையில் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்…..

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் பேருந்துகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அனுமதியின்றி இயக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.   போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் குளிரில் இரவு முழுவதும் பயணிகள் … Read more

ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதுதான் ; ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசைப்புயல் ஏஆர்.ரகுமான்இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ரஜினி அரசியல் வருகை குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பதிலளித்தார். அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதாகத்தான் தெரிகிறது எனவும் அவரது ஆன்மீக அரசியல் மதசார்பற்ற அரசியல் என்று தான் கூறினார் எனவும் அந்த ஆன்மீக அரசியலை பற்றி அவர்தான் கூறவேண்டும். என்றும் தெரிவித்ததார். மேலும், தனக்கு 25ஆண்டு காலம் ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். source : dinasuvadu.com

84 மீனவர்களை விடுவிக்ககோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். அதேபோல் 84 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டனர். அவர்களை விடுவிக்ககோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் 84 பேரையும் அவர்களின் 159 படகுகளையும்  இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும கூறி வலியுறித்து கடிதம் எழுதியுள்ளார். source : dinasuvadu.com

சென்னையின் புதிய நிலஅளவை வரைபடங்களை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் புதிய விரிவுபடுத்தப்பட்ட எல்லையை கொண்ட சென்னை மாநகராட்சியை முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இதன் வரைபட எல்லை அடங்கிய வலைதள முகவரியையும் அறிமுகபடுத்தினார். இந்த புதிய விருவுபடுத்தபட்ட எல்லையில் 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சி விரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய நிலஅளவை வரைபடங்களை eservices.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். source : dinasuvadu.com

போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிதுறையினர் சோதனை!

முன்னால்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 3 அறைகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா  நிலையத்திற்கு பிற்பகலில் 12.30 நிமிடத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது.வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்  நடத்தப்பட்ட சோதனையின் போது சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடந்தது.மேலும் 3 … Read more

சினிமாவில் எழுதிகொடுக்கும் வசனம் அல்ல அரசியல் …தினகரன் கமலுக்கு பதிலடி ….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார். இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: “வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் களம் தன்மை புரிந்து பேசுகிறாரா? புரியாமல் பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. விஷால் துணிச்சலாக தேர்தலில் குதித்தார். அவரை சதி செய்து போட்டியிடவிடவில்லை. இவர் கட்சி … Read more