நம்பிக்கையில்லா தீர்மானம்! இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை!

Aug 10, 2023 - 06:05
 0  0
நம்பிக்கையில்லா தீர்மானம்! இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மன்னிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுத்து வருவதால். மோடி தலைமையிலான மத்திய ரஸுக்கு எதிராக இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரு தினங்களாக நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றசாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசியிருந்தார். இதுபோன்று, பாஜக எம்பிக்களும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சமயத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஐ.என்.டி.ஐ.ஏ கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று பேச உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மறுபக்கம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow