ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான தடைகள்..! ஹெராட்டில் இந்த உணவகங்களுக்கு பெண்கள் செல்ல தடை..!

Apr 11, 2023 - 05:17
 0  1

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்கு பெண்கள் செல்ல தடை 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள்  ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் ஆட்சி சென்றது முதற்கொண்டு அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

பெண்கள் வெளியில் செல்வதற்கும், ஆடை அணிவதற்கும், கல்வி பயில்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு தடை, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியின்போது பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது போன்ற உத்தரவுகளை தாலிபான்கள் பிறப்பித்து இருந்தனர். பெண்கள் செல்ல தடை 

இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பெண்கள் ஹிஜாப்  சரியாக அணியாததால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆண்களும் பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow