போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் புதுச்சேரியில்  வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடித்த நபர் கைது!

போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் புதுச்சேரியில்  வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடித்த வழக்கில் சந்துருஜி என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார் . தேடப்பட்டு வந்த சந்துருஜியை புதுசிசேரி போலீசார் சென்னையில் வைத்து  கைது செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை!அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக அரசு நீட் தேர்வுக்கான கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து  நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  சென்னையில் சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது என்று கூறியுள்ளார். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று முன்தினம்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கல்வி கடன் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா மேல்முறையீடு !

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா உய்ரநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கோரி காங்கிரஸ் கட்சித் தலைவர் கடிதம்!

கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் கின்னஸ் அமைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் எழுதிய கடிதத்தில் ,பிரதமர் நரேந்திர  மோடி பொது மக்களின் வரிப்பணத்தில் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் பெயரை உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்.கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  கின்னஸ் பரிசு வழங்க வேண்டும் என ’கின்னஸ்’ அமைப்பிற்கு  … Read more

தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலை கடத்தலில் பாஜக  தலைவர்களுக்கும் தொடர்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெற்றுள்ள சிலை கடத்தலில் பாஜக  தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். சமீப காலமாக கோவிலில் சிலைகள் காணமல் போவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஜப்பானில் வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிர்பலி…!இதுவரை 179 பேர் பலி!

வரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் கனமழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 179 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று … Read more

தமிழக வரலாற்றுத் தலைவர்களின் பாடங்களை நீக்குவது வேதனைக்குரியது!சீமான்

தமிழில் நீட் தேர்வு எழுதிய  மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,நீட் தேர்வு போன்ற பொதுத் தேர்வுகளில்  மத்திய அரசு பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்பது, அந்தப் பாடத்திட்டத்தில் கல்வி பயில பிற மொழி மாணவர்களை இழுப்பது திட்டமிட்ட சதி.தமிழ் வரலாறு இதனால் அழியும் என நினைக்கிறார்கள் . எங்களது வேலுநாச்சியார் பற்றி படிப்பதை விட்டு … Read more

 மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய அரசு தான் நீட் தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுத்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம்   மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இன்றைய(ஜூலை 12) பெட்ரொல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து மாறாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.82காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா?

இயக்குனர் பாரதிராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில்  முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஜி.நாராயணன் என்பவர்இந்து கடவுளை விமர்சித்ததாக  செய்த புகாரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும் போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியது. பாரதிராஜா நிபந்தனை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.