சேலம் – சென்னை 8 வழிச்சாலை:15 ஆம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் !

சேலம் – சென்னை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 15 ஆம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று  எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சென்னை-சேலம்  பசுமை வழிச்சாலை அல்ல, இது பசுமையை அழிக்கும் சாலை.எஸ்.டி.பி.ஐ 8 வழிச்சாலையை எதிர்த்து   வருகிற 15 ம் தேதி சேலத்தில்  மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று  எஸ்.டி.பி.ஐ(SDP) கட்சியின் புதிய மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு … Read more

வீரன் அழகு முத்துகோன் திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை !

வீரன் அழகு முத்துகோனின் 260வது பிறந்தநாளான நேற்று துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துகோன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

படகுகளை மீட்க முடியாவிட்டால் ரூ.25 லட்சம் இழப்பீடு!மீனவ பிரதிநிதிகள்

மீனவ பிரதிநிதிகள் நேற்று முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்தித்தனர். சந்திபிற்கு பின்னர் மீனவ பிரதிநிதிகள் கூறுகையில், முதல்வரிடம் இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளோம்.ரூ.25 லட்சம் இழப்பீடு படகுகளை மீட்க முடியாவிட்டால் அரசு  வழங்க கோரியுள்ளோம். இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது கண்டனம் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று கூறினார்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்!

ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் காந்தியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் நகராட்ச்சி ஆணையருக்கு  பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இனி வரும் ஆண்டில் அரசு பள்ளிகளில் சீருடைகள் மாற்றியமைக்கப்படும்!பள்ளிகல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகல்வித் துறை  அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது கல்வித்துறைக்கு   புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.அதன் அடிப்படையில்  அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்.தமிழக அர உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை சு வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் . … Read more

காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் விவசாயிகளை பயன்படுத்தியது சரியில்லை!பிரதமர் நரேந்திர  மோடி

காங்கிரஸ் கட்சியின்  ஆட்சி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது என்று  பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எங்களால் அவரை பற்றி படிக்க முடியாது..! சீமான்

எங்களது வேலுநாச்சியார் பற்றி படிப்பதை விட்டு ஜான்சிராணிப் பற்றிப் படிக்கச் சொல்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் . வ.உ.சியைப் பற்றி படிப்பதை விட்டு வல்லபாய் படேல் பற்றி படிக்கச் சொல்ல முயல்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு!அண்ணா பல்கலைக்கழகம்

ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு  நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும்  ஜூலை 16ம் தேதி  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு செயல்படுத்தி வருகிறது! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறையில் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதி முழுமையாக பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிக்க ராகுல் காந்தி உதவி செய்யத் தயார்!பா.ரஞ்சித்

ராகுல் காந்தியிடம் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிக்க உதவ வேண்டுமென  கோரிக்கை விடுத்தேன் என்று இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை. விடுதலைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார் என்று ரஞ்சித் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.