+2 பொதுத்தேர்வு ரத்து – உத்திரப்பிரதேம் அறிவிப்பு..!

உத்தரபிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை உத்தரபிரதேச … Read more

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையில் பாட்னா..!

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11 ஆம் தேதி குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி அளித்தது. அதைப்பற்றி குறிப்பிட்ட நீதி ஆயோக் மருத்துவக்குழு உறுப்பினர், 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்ஸின் மருந்தை 2 மற்றும் 3 ஆம் கட்ட … Read more

புனேவில் புதிதாக டிரைவ்-இன் தடுப்பூசி மையம் ஆரம்பம்..!

புனேவில் கடந்த திங்கள் கிழமையன்று, முதல் முறையாக டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை ஹடஸ்பரில் உள்ள ஆடிட்டோரியத்தில் திறந்து வைத்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் இங்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கியுள்ளது. புனே முனிசிபல் கார்பெரேஷன் தொடங்கியுள்ள டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தில் முதல் நாளில் 64 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் முன்னுரிமை அளிக்கும் மையங்களில் இதுவே இந்நகரத்தின் முதல் தடுப்பூசி மையமாகும். இதை திறந்து வைத்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் … Read more

உத்தரகண்ட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து-அமைச்சர் அறிவிப்பு..!

உத்தரகண்ட் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே +2 தேர்வினை ரத்து செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து, +2 பொதுத்தேர்வினை குறித்த முடிவுகளை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று +2 பொது தேர்வை ரத்து செய்துள்ளனர். இதனை, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் … Read more

கரடியை எதிர்த்த துணிச்சல் சிறுமி..!

தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிகளை காப்பாற்ற சிறுமி ஒருவர் கரடியுடன் போராடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் சிறுமி செல்லமாக வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 17.  இவரது வீட்டில் உள்ள சுவற்றில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் நடந்து சென்றுள்ளது. அப்போது வீட்டில் வளர்த்த நாய்கள் அனைத்தும் கரடியை பார்த்து குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் கரடி நாய்குட்டிகளை தாக்கவும் வந்துள்ளது. நாய்களின் சத்தத்தால் வெளியே வந்து பார்த்த சிறுமி, நாய்க்குட்டிகளை … Read more

இங்கிலாந்தின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட்-தேர்வு..!

ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று இங்கிலாந்து  நியூசிலாந்துக்கு இடையிலான 2 ஆட்டங்கள் உள்ள டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடரின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இதில் அவர் பங்கு பெறவில்லை. மேலும், இங்கிலாந்து துணை கேப்டனாக ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் செயல்படுவார். ஆனால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து துணை கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் … Read more

திருமணத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன்-வியக்கவைக்கும் காரணங்கள்..!

சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் மணப்பெண்ணின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெறும் வழக்கம் பெரும்பான்மையாக இருக்கிறது. அதிலும் இந்து மத திருமணங்களில் இது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் அவரின் திருமணத்தின் போது மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி..!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். … Read more

நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளம்..!

நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நாடு நியூசிலாந்து.  இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தற்போது அங்கு மிக மோசமான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள கர்டர்பி மாகாணத்தில் பெருமளவு மழை பெய்ததால் அங்குள்ள ஆறு மற்றும் நீர்ப்பாசன வசதிகள் அனைத்தும் நிரம்பி அபாய கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள 3000 க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு … Read more

தேசிய நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது..!

அருணாச்சலப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அதன் தலைநகரமான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 59 கி.மீ. நீளம் கொண்டது. அண்மையில் கட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையானது அருணாச்சலப்பிரதேசத்தின் பண்டாரதேவாவில் தொடங்குகிறது. அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது. இடிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை..! pic.twitter.com/nrZVjtKCKv … Read more