நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளம்..!

நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அஞ்சி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நாடு நியூசிலாந்து.  இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தற்போது அங்கு மிக மோசமான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள கர்டர்பி மாகாணத்தில் பெருமளவு மழை பெய்ததால் அங்குள்ள ஆறு மற்றும் நீர்ப்பாசன வசதிகள் அனைத்தும் நிரம்பி அபாய கட்டத்தை அடைந்துள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள 3000 க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இருக்கக்கூடிய பாலங்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கிறிஸ், வெள்ள சேதம் மிக அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றும் இதற்கு முதல் கட்டமாக 1 லட்சம் நியூசிலாந்து டாலர்கள் நிவாரணமாகவும் அறிவித்துள்ளார்.