ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்

Rameshwaram Cafe: பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தற்போது பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். Read More – குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே! இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் … Read more

சிறுமி கூட்டு பலாத்காரம் – 6 பேர் கைது!

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைது. புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆரம்பத்தில் அந்த சிறுமியை கத்தி முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்களை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் அந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை … Read more

இந்தியாவில் ஒலிக்கப்பட்ட ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்.. 40 பேர் அதிரடி கைது!

புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை ஈடுபட்டது. இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை … Read more

புனேயில் டிரக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!

புனேயில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் ஒருவர் பலி, 4 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை(செப் 18) இரவு சாஸ்வத் சாலையில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) ஷிவ்ஷாஹி பேருந்து கண்டெய்னர் டிரக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். பஸ் பந்தர்பூரில் இருந்து புனே ஸ்வர்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..

புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் … Read more

சொத்துக்காக பாட்டியைக் கொன்ற பேரன்!

புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன். புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு … Read more

பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது-விமானி காயம்

புனேவின் இந்தாபூரில் பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த விமானிக்கு சிறு காயங்கள். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகாவில் இன்று(ஜூலை 25) காலை பயிற்சி விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 22 வயது பெண் விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த விமானத்தில் இருந்த பயிற்சி விமானி பவிகா ரத்தோட் (22), முதலுதவி அளிக்கப்பட்டு, ஷெல்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளார். இந்த விமானம் பாராமதி மாவட்டத்தில் உள்ள … Read more

புனேவில் அதிகரித்து வரும் டெங்கு !

கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200  பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை பதிவான அதிகபட்ச வெப்பநிலை

புனேவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூலையில் பெரும்பாலான நாட்களில் பலத்த மழைக்கு மத்தியில், புனேவில் ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2012 க்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான மிகக் குளிரான அதிகபட்ச வெப்பநிலையாகும். ஜூலை 1966 இல் அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

வங்கி வேலை… 1 லட்ச ரூபாய் மோசடி… ஏமாற்றப்பட்ட 22 வயது இளம் பெண்…

புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது. அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் … Read more