தமிழகத்தின் இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசின் அனுமதி எப்போது?

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது. மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது … Read more

கொரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு அறிவித்த ரூ.20,000 கோடி நிதி..!

கேரளாவில் கொரோனவை எதிர்கொள்ள அரசு 20,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பை தற்போது அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி. இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்ற பினராயி விஜயன் கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். இதை தொடர்ந்து கேரளவில் சட்டசபை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. அதன்படி, இன்று காலை … Read more

இந்தியாவில் கொரோனா வைரஸ் எட்டிப்பார்க்காத கிராமமா ?…இது தான் காரணம்

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் இந்த தொற்று கிருமி, இந்தியாவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் ஒரு கிராமத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கோசகுமுடா பகுதியில் உள்ள பலேங்கா கிராமத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இந்த கிராமம் சத்தீஸ்கர் பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு … Read more

ஒடிசாவில் +2 பொதுத்தேர்வு ரத்து..!

ஒடிசாவில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களே +2 தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, ஒடிசாவில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ஒடிசாவின் … Read more

தண்ணீரில் தத்தளித்த தன் குடும்பத்தை காப்பாற்றிய 7 வயது சிறுவன்..!

நடு ஆற்றில் சிக்கி தவித்த தந்தையையும் தங்கையையும் காப்பாற்றிய 7 வயது மகன். அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் போவ்சிட். இவருக்கு செஸ் என்ற மகனும் அபிகெல் என்ற மகளும் உள்ளனர். இவர் வார இறுதிநாட்களில் தனது குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். அதனால் சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அமெரிக்காவில் ஆற்றில் மீன்பிடிக்க 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறைக்கு … Read more

வெள்ளிக்கோள் சோதனை-நாசாவின் புதிய 2 திட்டங்கள்..!

பூமிக்கு அருகில் உள்ள வெள்ளிக்கோளினை பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக  நாசா அறிவித்துள்ளது. வெளிக்கிரகத்தில் பூமியை போன்று முன்பு உயிர்வாழ ஏற்ற சூழல் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் வெள்ளிக்கிரகத்தில் இருக்கும் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் தன்மையை பற்றி ஆய்வு செய்வதாக நாசா முடிவெடுத்துள்ளது. நாசாவின் இந்த இரு திட்டங்களுக்கு டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று பெயரிட்டுள்ளனர். டாவின்சி திட்டத்தில் நாசா வெள்ளிக்கோளின் வரலாறு, இதன் தோற்றம், இங்கு கடல்கள் இருந்ததற்கு ஏதும் அடையாளம் இருக்கிறதா என்றும் மற்றும் … Read more

இந்தோனேசியாவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் இன்று மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் வடக்கு மாலுகு பகுதியில் உள்ள டைடோர் கெபுலாவனில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மதியம் 3.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கர்நாடகத்தில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு ..!

கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 10 ஆம் தேதி அறிவித்த ஊரடங்கை ஜூன் 7 ஆம் … Read more

கேரளாவின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அந்தவகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் ஜூன் 3ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதன் காரணமாக … Read more

இப்படியும் இருப்பார்களா?…மருமகளை கட்டிப்பிடித்த கொரோனா மாமியார்..!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் மருமகளை ஓடிவந்து மாமியார் கட்டிபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தால் அல்ல, தான் மட்டும் தனிமையில் அவதிப்படணுமா? என்ற எண்ணத்தில் கொரோனா பாதித்த மாமியார் செய்த செயல் இது. தெலங்கானா மாநிலத்தில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 20. கொரோனாவின் தாக்கத்தால் இவரின் சகோதரி இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இந்த பெண்ணுக்கு உரிய … Read more