மீண்டும் சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன்இருக்கிறேன்..! தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பிறந்தால் வாழ்த்துக்கள் எம்.எஸ்.தோனி. உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Happy … Read more

பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற விவாதங்களில் … Read more

இளையராஜாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து..!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ‘ பத்ம விபூஷன்’ திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் ட்வீட்.  இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மக்களின் விடியலுக்காக உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதல்வர் ட்வீட்.  இரட்டைமலையாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த “திராவிடமணி” இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.’ என … Read more

ஊழல், லஞ்சம் குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்க அண்ணாமலைக்கு உரிமை இல்லை – சீமான் அதிரடி

ஊழல், லஞ்சம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி கேட்க அதிகாரமில்லை என சீமான் பேட்டி.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஊழல், லஞ்சம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி கேட்க அதிகாரமில்லை. எனக்கு கேள்வி கேட்கிற உரிமையும், தகுதியும் உள்ளது நான் கேட்கிறேன். கடந்த ஓராண்டில் திமுக … Read more

சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி..!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக … Read more

மாநிலத்தை துண்டாட துணிந்து விட்டது பாஜக – கே.பாலகிருஷ்ணன்

மாநிலங்களைத் துண்டுத்துண்டாக சிதைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்திற்கு ஏதுவாகவே ஒன்றிய பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.  நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு – நாளை ஒத்திவைப்பு : உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் … Read more

காலரா நோய் பரவல் – கண்காணிப்பு திறப்படுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம், வேகமாக காலரா பரவக்கூடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  காரைக்காலில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீட்டில் அருகில் உள்ள அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் வாந்தி வயிற்றுப்போக்கு என பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து காரைக்கால் பகுதியை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் கூறுகையில் பொது … Read more

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை..! ரூ.1.36 கோடி அபராதம் வசூல்..!

சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக … Read more