மீண்டும் சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன்இருக்கிறேன்..! தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘பிறந்தால் வாழ்த்துக்கள் எம்.எஸ்.தோனி. உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment